100 வயது நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறும் குறிப்புகள்!

நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே அனைவரின் ஆசை, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மொபைல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவற்றை மறந்து, ஐ.டி வேலையை விட்டு உழவு செய்ய முடியும், விறகு வெட்டி அடுப்பு எரித்து உணவு சமைத்து உண்ணமுடியும்.

உட்கார்ந்தே இடத்திலேயே அனைத்தும் எதிர்பாராமல் நான் உழைத்து பிறருக்கும் உணவு அளிப்பேன் என்பது உங்களுக்கு சாத்தியம் ஆனால், நோயற்ற வாழ்க்கைமுறை எளிது.

சித்தர்கள் நோயற்ற வாழ்க்கை வாழ சில குறிப்புகள் கூறியுள்ளார்கள். முடிந்தால் இதையும் பின்பற்றுங்கள்…

மனிதனின் உடல், உயிர், ஆன்மா மூன்றையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது கடுக்காய். கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கி, அதை நன்கு பொடியாக்கி கொண்டு, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

1. ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதும் பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
2. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரவு மட்டும் உறங்குதல் வேண்டும்.
3. புளித்த தயிரை உட்கொள்ள வேண்டும்.
4. பசும் பால் குடிக்க வேண்டும்.
5. இரவு உறங்கும் முன்னர் வாசனை பொருட்கள் மற்றும் மலர்களை முகர்ந்து பார்க்க கூடாது.
6. இரவில் மரம், பறவை, விளக்கு போன்றவற்றின் நிழலில் தங்க கூடாது.

Tags: ,