மலையகத்தில் மீண்டும் செயற்பாட்டிற்கு வரும் மின் நிலையம்

மஸ்கெலியா – கெனியன் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து கெனியன் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு நீரை கொண்டு செல்லும் சுரங்கப் பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக கெனியன் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!