ஜப்பான் வெள்ளப்பெருக்கு: – கூரையின் மீது ஏறி உயிர் பிழைத்த குதிரை

ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் இருந்து, குதிரை ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி உயிர் தப்பியுள்ளது. ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழையால் 179 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பல வீடுகள் மூழ்கியுள்ளன. அத்துடன் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவில் பெய்த மழை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து குதிரை ஒன்று அடித்து வரப்பட்டது.

தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த குதிரை, வீட்டின் கூரை மீது ஏறி நின்றது. 3 நாட்களாக அங்கேயே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளம் வடிந்த பின்னர் விலங்கியல் ஆர்வலர்கள் அந்த குதிரையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குதிரையானது குராஷிகி நகரில் உள்ள வயதானவர்கள் தங்கும் விடுதியில் வளர்க்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. 9 வயதாகும் இந்த குதிரைக்கும், அதன் குட்டிக்கும் உணவு வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!