ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் – மீரிஹானவில் பதற்ற நிலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் நேற்றிரவு பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    
ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர், ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுக்க முயன்ற போது மோதல்கள் ஏற்பட்டன.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டன.
நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனத்தின் மீதும் கல்லெறிந்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இன்று அதிகாலை வரை போராட்டங்கள் நீடித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!