தடுமாறிய காக்கா முட்டை நடிகை ஐஸ்வர்யா!

ஒரே டேக்கில் நடிப்பது ஒரு சில நடிகர்களுக்கே கைவந்த கலை. இரண்டு, மூன்று, நான்கு என ரீடேக் எடுத்துக்கொண்டே போனால் படப்பிடிப்பில் பணியாற்றுபவர்களே கடுப்பாகி விடுகிறார்கள். காக்கா முட்டை நடிகை ஐஸ்வர்யா பல படங்களில் நடித்து அனுபவம் வாய்ந்தவர். அவர் ஒரு காட்சிக்கு 25 டேக் வாங்கியிருக்கிறார்.

லட்சுமிராய், டாப்ஸி, எமி ஜாக்ஸன் வரிசையில் இந்திக்கு சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா. ‘டாடி’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஆங்கிலம், தமிழில் சரளமாக பேசக்கூடிய ஐஸ்வர்யா, இந்தி படம் என்றதும் பயந்தார். அத்துடன் மராட்டிய மொழியிலும் இதை படமாக்க உள்ளதாக கூறியதும் திக்கென்று உணர்ந்தார். ஏனென்றால் இரண்டு மொழியும் அவருக்கு தெரியாது. பிறகு இயக்குனரிடம் நேரம் கேட்டு இந்தி, மராட்டி மொழிகளை கற்றுக்கொண்டு ஷூட்டிங்கிற்கு தயாரானார். ஒவ்வொரு காட்சியும் அவருக்கு சவாலாகவே அமைந்தது.

ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்கும் அர்ஜூன் ராம்பால் கூறும்போது,’பல காட்சிகளில் வசனங்கள் நன்கு பேசி நடித்தாலும் சில காட்சிகளை ஐஸ்வர்யாவால் ஓரிரு டேக்கில் முடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் மொழி பிரச்னைதான்’ என்றார். இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது.’சில காட்சிகள் 25 டேக்குகள் கூட ஆகின. ஆனாலும் பட குழுவினர் டென்ஷன் ஆகாமல் அமைதி காத்தனர்’ என்றார்.

Tags: ,