இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது! சுதந்திரக் கட்சி

நாடு அராஜக நிலை நோக்கி நகர்வதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
மக்களின் பிரச்சினைகள் அவர்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மலினப்படுத்தும் காரணத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளது.

இலங்கை தற்பொழுது அராஜக நாடாக மாற்றமடைந்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களும் ஏனைய கட்சிகளும் மக்களை புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது. 

அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உணர்வுபூர்மாக அறிக்கைகளை வெளியிடுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!