
நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணமும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!