ஈரானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர் தடுப்பு முகாமில் உயிரிழந்த சோகம்!

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் வில்லாவுட் குடிவரவுத் தடுப்பு முகாமில் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
    
Refugee Action Coalition எனும் அகதிகள் நல அமைப்பின் தகவல்படி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் இருக்கும் அறையில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 வயதுடைய இந்த தஞ்சக்கோரிக்கையாளர், கடந்த 2 ஆண்டுகளாக இந்த தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

உயிரிழந்த தஞ்சக்கோரிக்கையாளரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய எல்லைப்படை, “தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஆஸ்திரேலிய எல்லைப் படை முன்னுரிமை அளிக்கும். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதால், இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்காது,” எனத் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!