சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்தும் ரஷிய வீரர்கள்!

உக்ரைன் மீது ரஷியா 36-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
    
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷிய வீரர்கள் சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ஜெர்மி பிளமிங் (Jeremy Fleming Gchq) கூறுகையில்,
உக்ரைன் மக்களின் எதிர்ப்பை ரஷிய அதிபர் புதின் (Vladimir Putin) தவறாக கணித்துவிட்டார். போரால் விதிக்கப்படும் பொருளாதார தடைகளின் விளைவுகளை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.

தனது ராணுவத்தின் திறனை உயர்த்தி மதிப்பிட்டு உக்ரைன் போரில் விரைவில் வெற்றிபெற்றுவிடுவோம் என அவர் கணித்துள்ளார். மன வலிமையின்றி, போதிய ஆயுதங்கள் இன்று உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் ரஷிய வீரர்கள் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

ரஷிய வீரர்கள் தங்கள் சொந்த ஆயுதங்களையே அழிப்பது மட்டுமின்றி ரஷிய வீரர்கள் தவறுதலாக தங்கள் சொந்த போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துகின்றனர்.

அதேவேளை, உக்ரைன் மீதான போரை தவறாக கணித்துவிட்டோம் என்பதையும், அதன் தற்போதைய நிலையையும் ரஷிய அதிபர் புதினின் (Vladimir Putin) ஆலோசகர்கள் அவரிடம் (புதினிடம்) (Vladimir Putin) தெரிவிக்க பயப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!