கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவு, களனி மற்றும் கல்கிலை பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!