விஞ்ஞானிகள் எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும்: – ஐ.நா. பொதுச் செயலாளர்

சீனா மற்றும் இந்தியாவை அடுத்து அமெரிக்கா அதிக இயற்கைச் சீற்றங்களை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டொனியோ குடேர்ரெஸ் 1995-ம் ஆண்டுக்குப் பிறகு, இயற்கைச் சீற்றங்களால் அமெரிக்காவில், 2 கோடியே 42 லட்சம் பேர் வாழ்விடங்களை இழந்து வெற்றிடங்களாக மாறிவருகிறது என்று ஆன்டொனியோ குடேர்ரெஸ் கூறியுள்ளார்.

டெக்சாஸில் சமீபத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தை குறிப்பிட்டுப் பேசிய அவர், மீட்பு மற்றும் நிவாரணங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. சபை செய்து தரும் என உறுதியளித்தார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அதன் அவசியம் குறித்தும் ஐ.நா. பொதுச்செயலாளர் பேசினார். பருவநிலை மாற்றத்தை இந்த இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பு உறுதிப்படுத்தி வருவதாகவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

Tags: