லட்சுமிராயின் கவர்ச்சி படம்: – ரிலீஸ் செய்யும் தணிக்கை அதிகாரி

மத்திய திரைப்பட தணிக்கை குழு அதிகாரியாக இருந்தவர் பஹாலஜ் நிஹ்லானி. திரைப்படத்தில் முத்தக் காட்சி, கவர்ச்சி, டபுள் மீனிங் வசனம் இடம்பெற்றால் கண்மண் ெதரியாமல் வெட்டி தள்ளுவார். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து மத்திய அரசுக்கு புகார் பறக்க கடந்த மாதம் நிஹ்லானி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது தனது பழைய தொழிலான திரைப்பட விநியோகத்துறைக்கு வந்துவிட்டார் நிஹ்லானி.

டூ பீஸ் நீச்சல் உடை, முத்தக்காட்சி, டாப்லெஸ் என கிக்கான கிளாமர் காட்சிகளில் லட்சுமிராய் நடித்திருக்கும் இந்தி படம் ‘ஜூலி 2’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்று வழங்கப்பட்டது. படத்தின் விநியோக உரிமையை நிஹ்லானி வாங்கியிருக்கிறார். தணிக்கை அதிகாரியாக இருந்தபோது கிளாமர் என்றாலே கண்ணை பொத்திக்கொண்டவர் இப்படத்தை வாங்கியிருப்பது பலரையும் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.

‘இப்படியொரு கிளாமர் படத்தை நீங்கள் வாங்கி விநியோகிப்பது ஏன்?’ என்று நிஹ்லானியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘இப்ப நான் மத்திய திரைப்பட தணிக்கை குழு அதிகாரி கிடையாது. தணிக்கை குறித்தான கேள்வியை எங்கிட்ட கேக்காதீங்க. இது வயதுக்கு வந்தவங்க பாக்குற படம். தணிக்கை குழு என்ன சான்றிதழ் வழங்கிச்சோ அதை நாங்க ஏத்துகிட்டோம். என்னோட தொழில் சினிமா… சினிமா… சினிமாதான். தணிக்கை குழு அதிகாரியா பொறுப்பிலிருந்தப்ப என் வேலையை நான் பொறுப்பா நிறைவு செஞ்சேன். இப்ப நான் இந்த படத்தோட விநியோகஸ்தர். இது துணிச்சலான, அழகான ஆசிர்வதிக்கப்பட்ட படம்’ என்றார். அவரது பேட்டியை கண்டு ஷாக் ஆன திரையுலகினர் உங்களுக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா என்று விஜயகாந்த் பாணியில் பன்னீர் தூவிக்கொண்டிருக்கின்றனர்.

Tags: ,