சோகத்திலும் 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய பெண்!

இயற்கைப் பேரிடர் காலத்தின்போது, பலரும் தங்களால் இயன்றதை நன்கொடையாக அளிப்பார்கள். பணமாக, பொருளாக, உடைகளாக, உணவாகத் தானம்செய்வார்கள்.அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர், டொனிலா பால்மர். இவரின் குழந்தைக்கு, பிறக்கும்போதே இதய நோய் இருந்தது. குழந்தையால் தாயின் மார்பில் பால் குடிக்க முடியாத நிலை. குழந்தையின் நிலையால் டொனிலா மிகுந்த வேதனையில் இருந்தார்.

தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் சேகரித்து வைப்பதை டொனிலா வழக்கமாகக்கொண்டிருந்தார். அப்படி, 30 லிட்டர் தாய்ப்பால் சேர்ந்திருந்தது. அண்மையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தை ஹார்வி புயல் புரட்டிப்போட்டது. புயலிடம் சிக்கி ஹூஸ்டன் நகரம் சின்னாபின்னமாவதைத் தொலைக்காட்சியில் பார்த்து, டொனிலா மிகுந்த வருத்தமடைந்தார்.குழந்தைகள் பால் கிடைக்காமல் தவிக்கும் விஷயத்தையும் கேள்விப்பட்டார். உடனடியாக, டொனிலா தன் வீட்டில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த 30 லிட்டர் தாய்ப்பாலை ஹூஸ்டன் நகருக்கு அனுப்பினார். டொனிலா வழங்கியது 1,040 அவுன்ஸ் தாய்ப்பால். ஒரு குழந்தை ஒரு சமயத்தில் 3 அவுன்ஸ் பால் அருந்தும். கிட்டத்தட்ட 345 முறை பால் ஊட்டுவதற்கு நிகரான தாய்ப்பாலை டொனிலா தானமாக வழங்கியுள்ளார். டொனிலாவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகிறது

Tags: ,