அப்பாவி மக்களை கொன்று சடலங்களை சாலையில் விட்டு சென்ற ரஷ்ய வீரர்கள்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

உக்ரைனில் எரித்து, சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற அப்பாவி மக்களின் சடலங்களை, ரஷ்ய வீரர்கள் பிரதான சாலையில் கைவிட்டு சென்றுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளியே முக்கியமான E-40 பிரதான சாலையில் இருந்து மொத்தமாக 13 சடலங்களை மீட்டுள்ளனர். கீவ் நகரம் ரஷ்ய தாக்குதலில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்றே மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    
இதுவரை மீட்கப்பட்ட சடலங்கள் அதிகாரிகள் தரப்பால் அடையாளம் காணப்படவில்லை எனவும், டசின் கணக்கான சடலங்கள் சாலையின் ஓரங்களில் குவிகப்பட்டிப்பது நெஞ்சை உலுக்கும் காட்சி என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல அப்பாவி மக்கள், ரஷ்ய வீரர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், எரிந்த நிலையில் காணப்படும் சடலங்கள் உண்மையில் உயிருடன் கொளுத்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கீவ் நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், தாக்குதல் தொடர்வதாகவே உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய துருப்புகளே கீவ் நகரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தும், தலைநகரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான தாக்குதலை எதிர்கொள்வதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கீவ் நகரில் கொல்லப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், தற்போதைய சூழலில் எவரும் நகருக்கு திரும்ப வேண்டாம் எனவும் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!