பட்ஜெட் விலையில் ஹானர் 6 பிளே அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 6 பிளே என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 3020 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூப்பட்டுகிறது.

சீனாவில் CNY 599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 6 பிளே ஸ்மார்ட்போனில் EMUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 5.0 இன்ச் எச்டி 720×1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737T பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் 6 பிளே ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.0, யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் மற்றும் வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் அக்செல்லோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், பிராக்சிமிட்டி சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹானர் பிரான்டின் ஹானர் V9 பிளே எனும் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. EMUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், ஹைப்ரிட் டூல் சிம் ஸ்லாட், 5.2 இன்ச் எச்டி 720×1280 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 3 ஜிபி அல்லது ஜ4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சீனாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹானர் 6 பிளே ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Tags: