உலகத்திற்கே ஞானபீடமாக தமிழக மண் உள்ளது: – உயர் நீதிமன்றம்

531 சிலை கடத்தல் வழக்குகளில் பொன்மாணிக்க வேலுக்கு 19 வழக்குகளை மட்டும் விசாரிக்க ஒதுக்கியது ஏன் என்று சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சிலை கடத்தலில் அதிகாரிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் நீதிமன்றம் அவர்களை தப்பிக்க விடாது என்றும் தமிழக மண் உலகத்திற்கே ஞானபீடமாக உள்ளது; தொன்மையான சிலைகளை கடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் டி.ஜி.பி. தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு நீதிபதி மகாதேவன் ஒத்திவைத்தார்.

Tags: