கபடியை களங்கப்படுத்தவில்லை: – யார் இவன் இயக்குனர் விளக்கம்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம், யார் இவன். சச்சின் ஜே.ஜோஷி, இஷா குப்தா, பிரபு, சதீஷ், பிரதாப் போத்தன், கிஷோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் கபடியை வன்முறை விளையாட்டு ேபால் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் சத்யா கூறியதாவது: ேபாலீசாரால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. அதைச் செய்பவன் யார், எதற்காகச் செய்கிறான் என்பது கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஹீரோ ப்ரோ கபடி விளையாட்டு வீரன் என்பதால், அந்த விளையாட்டை வைத்து சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறோம். மற்றபடி தமிழர்களின் கலாச்சார விளையாட்டை நாங்கள் களங்கப்படுத்தவில்லை. கதைக்குத் தேவை என்பதாலேயே அந்தக் களத்தைத் தேர்வு செய்தோம். கபடி விளையாடுபவர்கள் வீரமானவர்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறோம். அதிக பொருட்செலவில் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். 2 மணி நேரம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் விதமாக படம் உருவாகியுள்ளது.

இனிமேல் இரண்டெழுத்து வெற்றி ஹீரோவுடன் தன்னை இணைத்து எழுத வேண்டாம் என்று, மீடியாவிடம் சொல்கிறாராம் அங்காடித்தெரு ஹீரோயின். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளத்தில் கணிசமான படங்களில் நடித்து வரும் அவர், தன் காதலைப் பற்றிய செய்திகள் மீடியாவில் பரவுவதால், புதுப்பட வாய்ப்பு குறைந்துவிடுகிறது என்று பதறுகிறாராம். இதனால், அந்த ஹீரோவுடன் நடித்துள்ள தமிழ்ப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பெரிதும் தயங்குகிறாராம்.

Tags: ,