
ஊடகங்களிடம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு அரச தலைவர் தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும்.
இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன். புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் அரச தலைவரும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!