டூயல் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. சாம்சங் சி8 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா, முகத்தை அங்கீகரிக்கும் (facial recognition) வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சி8 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இரண்டு வித மாடல்களில் முறையே 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா வசதி கொண்டுள்ள சி8 ஸ்மார்ட்போனில் டூயல் போட்டோ மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படங்களை எடுத்த பின்பும் போகஸ் மாற்றியமைக்க வழி செய்கிறது. இத்துடன் முகத்தை அங்கீகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், முகத்தை அறிந்து ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும்.

சாம்சங் சி8 சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 2.39 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் P20 ஆக்டாகோர் பிராசஸர்
– 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
– 13 எம்பி, f/1.7 + 5 எம்பி, f/1.9 பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2
– வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

புதிய சி8 ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதோடு கோல்டு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் சி8 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Tags: ,