கோட்டாபய தொடர்ந்தும் நாட்டின் தலைவராக செயற்பட தகுதியற்றவர்

அரசியல் கட்சிகளின் வழி நடத்தல் இன்றி வீதியில் இறங்கி போராடும் மக்கள் ஜனாதிபதி பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே கோருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால், அமைச்சரவையை மாற்றியமைப்பதன் மூலமோ அனைத்து கட்சிகள் இணைந்த கூட்டு  அரசாங்கம் என்ற நாடகம் மூலமோ நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு அரசியல் நாடகங்களோ தொடர்ந்தும் செல்லுப்படியாகாது என்பதால், மக்களின் கோரிக்கைக்கு தலை வணங்கி, ஜனாதிபதி உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வீதியில் இறங்க முடியாத நபர் தொடர்ந்தும் நாட்டின் தலைவராக செயற்பட தகுதியில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!