ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
    
யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ரெலோ அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனிநபராக இருக்கின்ற சுமந்திரன் ஒரு கட்சியை வெளியேறுமாறு கூறுவதற்கு அருகதை அற்றவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலர் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபை பலவீனப்படுத்தினால் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதாக அமையும்.

சுமந்திரனின் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தனிநபர் ஒருவருடைய கருத்தாகவே பார்க்க முடியும். ஆகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, பங்காளி கட்சிகள் விரைவில் சந்தித்து எமது கண்டனத்தை தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!