காபந்து அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கப் போவதில்லை: டலஸ் அழப்பெரும

காபந்து அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கப் போவதில்லை என முன்னாள் ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குக் காபந்து அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு காபந்து அரசாங்கம் நிறுவப்பட்டால் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஏனைய வரப்பிரசாதங்களையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காகக் கடுமையான அர்ப்பணிப்புக்களைச் செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய காபந்து அரசாங்கமொன்றை நிறுவுவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!