கீர்த்தி-கேத்ரினாவுக்கு ஈடுகொடுப்பாரா நஸ்ரியா?

திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற சீனியர் ஹீரோயின்கள் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் இளம் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், கேத்ரின் தெரசா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை ஆக்ரமிக்கத் தொடங்கி உள்ளனர். இவர்களுக்கு ஈடுகொடுப்பதற்காக ரெஜினா கேசன்ட்ரா, பிரணிதா போன்ற நடிகைகள் கவர்ச்சிக்கு துணிந்து நடித்து புதிய வாய்ப்புகளை கைப்பற்றி வருகின்றனர்.

திரையுலகில் இப்படி சகட்டுமேனிக்கு போட்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில் திருமணமான நடிகைகள் தற்போது ஹீரோயினாக மீண்டும் நடிக்க வருவதால் கிசுகிசு பரவி வருகிறது.இயக்குனர் விஜய்யை மணந்த அமலாபால் அவரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். பக்குவப்பட்ட கதாபாத்திரங்களே அவருக்கு வருகிறது. விரைவில் அவர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திருட்டுபயலே 2ம் பாகம் தனக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார் அமலாபால். 3 வருடங்களுக்கு முன் கோலிவுட்டில் பிஸியாக இருந்த நடிகை நஸ்ரியா நாசிம் திடீரென்று பஹத் பாசிலை மணந்து இல்லறத்தில் செட்டிலானார்.

தற்போது அவர் மலையாளத்தில் பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். திருமணத்துக்கு முன்பு இருந்த மவுசு திருமணம் ஆன பிறகு இருக்காது என்பது பொதுவாக திரையுலகினர் எண்ணம். இந்நிலையில் நஸ்ரியாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்குமா? ஏற்கனவே போட்டியிலிருக்கும் கீர்த்தி சுரேஷ், ரெஜினா, கேத்ரின் தெரசா போன்றவர்களின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியுமா? கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா? குடும்பத்தை விட்டுவிட்டு எத்தனை நாள் இவரால் அவுட்டோர் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியும் போன்ற பல கேள்விகள் நஸ்ரியா முன் இருப்பதால் அதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்தே ரீஎன்ட்ரியின் வெற்றி கைகூடும்.

Tags: