முன்னாள் நிதியமைச்சரின் அறிவிப்பு..

நிதி அமைச்சினை மீண்டும் பொறுப்பேற்க போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் அமர்வுகள் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையாக  113 பேர் காணப்படுகின்ற நிலையில் நிதி அமைச்சு பொறுப்பினை அவர்களில் ஒருவருக்கு   வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமது கட்சியானது ஆரம்பம் முதல் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே கட்சியின் நிலை குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என முன்னாள் நியதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!