தடையின்றி மின்சாரத்தை வழங்க இந்தியாவிடம் மீண்டும் டீசல் கோரல்

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மின்சாரத்தினை   தடையின்றி விநியோகிப்பதற்கு  பொதுப்பயன்பாடு ஆணைக்குழு இந்திய உயர்ஸ்தானிகரிடம் டீசல் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க  கடிதம் மூலம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடன் குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் 37 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் இருப்பை எதிர்பார்த்துள்ளதாகவும்  குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் காலத்தினை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!