பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய முன்னாள் நிதி அமைச்சர்

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.  

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு   அரசாங்கமே பொறுப்பு, இதற்கும் தாம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

போராட்டக்காரர்களின் தூண்டுதல்கள் எங்களுக்குத் தெரியும், இதற்குத் தீர்வு காண வேண்டும்,
ஐஎம்எப் போக வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். ரூபாய் மிதக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.

கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று வருகிறார். நாளை பொறுப்பேற்பார். இந்த விவகாரத்தில் ஐஎம்எஃப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!