உலக அளவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

சாலை விபத்துகள் குறித்து கவலை தெரிவித்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கட்கரி கூறியதாவது: ஜெனிவாவில் உள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக சாலை புள்ளிவிவரங்கள்(WRS) 2018-ன் சமீபத்திய இதழின் அடிப்படையில், விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் இருந்தது.
    
தற்போது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்திலும் உள்ளது என்று கட்கரி கூறினார். மேலும், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதம் 69 சதவீதமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதம் 80 சதவீதமாக இருந்ததாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
      

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!