சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்று மாலை சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், தாய்லாந்துப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து. மூலோபாய பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டு, நிலையான சமூக அபிவிருத்தி, குற்றவாளிகளை பரிமாற்றம் செய்தல் குறித்த இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

அதேவேளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று, காலையுணவு விருந்துடன், தாய்லாந்துப் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது சுதந்திர வணிக உடன்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு, வணிக மற்றும் முதலீடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!