பிரதமர் பதவி விலக வேண்டும்: நாடாளுமன்றில் விமல் சூளுரை

பிரதமர் உட்பட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் அத்துடன் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால நிர்வாகத்தில் அனைத்து கட்சியையும் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்க வேண்டும் அத்துடன், நட்பு நாடுகளுடன் இணைந்து நடைமுறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்  இதனை தவிர பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க வேறு வழி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசிங்கமான அமெரிக்கரை அரசாங்கத்திற்குள் அழைத்து வந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு ஏன் செல்லக்கூடாது என்பதற்காக விளக்கம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் நாடடுக்குள் பிரச்சினையை உருவாக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சீனா, ஜப்பான் உட்பட்ட நட்பு நாடுகளுடன் அரசாங்கம் விரோத மனப்பாங்கை உருவாக்கி கொண்டது. எனவே நாடு தற்போது இடைக்கால நிர்வாகம் ஒன்றுக்கு செல்வதே உசிதமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நட்பு நாடுகளுடன் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சர் அலிசப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் இன்று நாடு திரும்புவார் என்றும் நாளை அவர் பதவி ஏற்பார் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!