திடீரென நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து சற்று நேரத்திலேயே திரும்பிய கோட்டாபய! கரவொலி எழுப்பி வரவேற்ற ஆளும் தரப்பு

நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று  வருகை தந்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!