ஜெயலலிதா மரண விசாரணை: அப்பல்லோ டாக்டர்-நர்சு ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் மற்றும் நர்சு ஆகியோர் ஆஜரானார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முக்கிய தகவல் தெரிவிப்போரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

ஒவ்வொருவர் அளிக்கும் வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களாக அப்பல்லோ டாக்டர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

இன்று அப்பல்லோ டாக்டர் பத்மா, நர்சு மகேஸ்வரி ஆகிய 2 பேரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் ஆஜர் ஆகி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!