இப்படி மாறுகிறாரா அரவிந்த்சாமி?

அரவிந்த்சாமி தனி ஒருவன் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். ஸ்டைலான வில்லன் வேடத்தில் நடித்திருந்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு படங்கள் தேடி வருகின்றன. சதுரங்க வேட்டை 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களை தொடர்ந்து அடுத்து வணங்காமுடி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்கிறார் அரவிந்த்சாமி. அவருடன் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி நடிக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றிருக்கும் அரவிந்த்சாமி அதற்காக கட்டுமஸ்தான உடற்கட்டுடன் சிக்ஸ் பேக் வைக்க உள்ளதாக தகவல் பரவியது. ஏற்கனவே விவேகம் படத்திற்கு அஜீத் சிக்ஸ்பேக் வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் அவரது சிக்ஸ்பேக் தோற்றத்தை சரிவர காட்டவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக்கொண்டனர். அரவிந்த்சாமியை முழுமையாக சிக்ஸ்பேக் உடன் காட்டுவீர்களா? என்று பட தரப்பில் விசாரித்தபோது, ‘இதில் இன்ஸ்பெக்டராக நடித்தபோதும் அதற்காக தனிபட்ட முறையில் தோற்றத்தில் அவர் மாற்றம் எதுவும் செய்யவில்லை. சிக்ஸ்பேக் உடற்கட்டு என்பதெல்லாம் சும்மாதான். வழக்கமான உடற்கட்டுடன் வித்தியாசமான ஸ்டைலில் நடிக்கிறார்’ என்றனர்.

Tags: