பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனை

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் குழுவின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள் இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களிடம் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் ம் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

இதேவேளை நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்தல் என்பது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையினை பொறுத்தது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!