நான் நாட்டில் இருந்து வெளியேறமாட்டடேன்! குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பேன்!- அஜித் நிவாட் கப்ரால்

தாம், இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை இந்த வார ஆரம்பத்தில் தனது பதவியில் இருந்து விலகிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக பல்வேறு தரப்பினரால் தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம், எப்போதும்  வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுகளை அமைதியான, கண்ணியமான மற்றும் தொழில்முறை முறையில் கையாண்டமை அனைவருக்கும் தெரியும் என்றும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏனைய ஆளுநர்களை போன்று பதவி விலகிய பின்னர் வெளியேறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 18ஆம் திகதி வரை கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அத்துடன் அவரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலதிக நீதவான் அறிவித்தலை அனுப்பியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!