நாடு விரைவில் வங்குரோத்து நிலையை அடையும்!

நாடு வெகுவிரைவில் வங்குரோத்து நிலைமையை அடைவதை எவராலும் தவிர்க்க முடியாது. மோசடியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க முன்னர் அவர்கள் ஊடாகவே அரசியமைப்பு முழுமையாக திருத்தியமைக்க அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட்டால் மாத்திரமே படித்த இளம் தலைமுறையினர் அரசியலுக்குள் பிரவேசிப்பார்கள் என முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்தார்.
    
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது ஆகவே டொலர் பரிவர்தனை குறித்து அதிக அவதானம் செலுத்தமாறு பல வருடகாலமாக அறிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்கொள்கிறது.

நாடு வெகுவிரைவில் வங்குரோத்து நிலைமையினை அடையும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்ளும் சூழல் காணப்படுகிறது.

ஆட்சியாளர்கள் தங்களின் எண்ணம் போல் மோசடி செய்யலாம் என்று குறிப்பிடும் அளவிற்கு நாட்டின் அரசியலமைப்பு காணப்படுகிறது.

அரச தலைவர்கள் நிச்சயம் பதவி விலக வேண்டும் அதற்கு முன்னர் அவர்களால் அரசியலமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒன்றினைந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் முழுமையாக இரத்து செய்யப்படுதல் அத்தியாசியமானது. படித்த இளம் தலைமுறையினர் அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டுமாயின் எல்லையற்ற வரபிரசாதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

இலாபம் பெறுவதற்காகவே அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் முழுமையாக அரச கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.அரசாங்கத்தின் செலவுகள் அனைத்தும் ஒரு மையப்பகுதியில் சுயாதீனமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். நாம் முன்வைத்துள்ள யோசனைளை செயற்படுத்த நிச்சயம் போராடுவோம் என்றார்.
      

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!