
கேல்கரியை சேர்ந்த ஜாமி லின் ஸ்கீபிள் (23) என்ற பெண் உயிருக்கு போராடுவதாக கடந்த வியாழன் அன்று பொலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து Templeview Drive N.E 300 ப்ளாக் முகவரிக்கு பொலிசார் அன்றைய தினம் மாலை 7.15 மணியளவில் சென்றனர்.
அங்கு துப்பாக்கி குண்டடிப்பட்ட நிலையில் சுயநினைவின்றி கிடந்த ஜாமியை மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த மரண வழக்கு தொடர்பில் விசாரித்து வரும் பொலிசார் ஜாமி கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் இது கொலை வழக்காக விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கேல்கிரியில் இந்தாண்டு நடந்துள்ள 10வது கொலை இது என தெரியவந்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!