இந்திய கடன் திட்டத்தின் கீழ் அரிசி இறக்குமதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,ஆயிரம்  மெட்ரிக் தொன் அரிசி இன்று  நாட்டை வந்தடையவுள்ளதாக   வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த  தொகை அரிசி  சதொச  விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின்  செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

இதேவேளை பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் விநியோகிப்பதற்காக 3 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.  

அரச  பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும்  குறித்த தொகை அரிசி, சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. 

இதற்கமைய பொன்னி சம்பா, அரிசி  பொன்னி நாடு அரிசி  மற்றும் வௌ்ளை பச்சையரிசி என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஒரு கிலோகிராம்  பொன்னி சம்பா அரிசி  130 ரூபாவுக்கும்  ஏனைய அரிசி வகைகளை 110 ரூபாவுக்கும்  விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 
இதேவேளை பண்டிகை   காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பால் மாவுக்கான சிறிய தட்டுப்பாடு மாத்திரமே  காணப்படுவதாக    அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!