பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் மசோதா வெற்றி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு எம்பிக்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 290 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் அதிகம் பேர் வாக்களித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு தொடர்பான மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 326 எம்பிக்களில் 290 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த மசோதா 1972ம் ஆண்டு இயற்றப்பட்ட ஐரோப்பிய சமுதாய சட்டத்தை தகர்த்தெறியும் வகையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வாக்களிப்பதை தவிர்த்தனர். இதனால் மக்கள் சபையில் நேற்று நடைபெற்ற விவாதத்திற்கு பின் மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக 2ம் கட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் கேர் ஸ்டார்மர் கூறுகையில், இந்த மசோதாவில் உள்ள மிக மோசமான அம்சங்களை நீக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நமது பாதுகாப்பில் மிரட்டலை சந்தித்து வருகிறோம் என்று பிரிக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்தார்.

Tags: