நாட்டில் 237 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு

நாட்டில் 237 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு நிலவுவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ  இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும்  மருந்து தட்டுபாட்டினால் அரச வைத்தியசாலைகள் மாத்திரம் இன்றி தனியார் வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சளி இருமல் போன்ற சாதாரண நோய்கள் உள்ளிட்ட இருதய நோய் மற்றும் விசேட தேவைகளுக்கான மருந்துகளுக்கும் தற்போது  தட்டுபாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர்  நெருக்கடி மருத்துவ துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இட்டுகம நிதியத்தின் தலைவராக செயற்படும் மத்திய வங்கியின் ஆளுநர் குறித்த நிதியத்தைப் பயன்படுத்தி இந்த நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!