மூளையில் அறுவை சிகிச்சை: – செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி

சென்னையில் 10 வயது சிறுமி ஒருவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்த போது செல்போனில் கேண்டி கிரஷ் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியின் மூளையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையில் கட்டி இருந்துள்ளது.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர், மேலும் அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.மேலும், வலி ஏற்படாமல் சிறுமி விழித்திருப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என மருத்துவர்கள்தெரிவித்தனர்.அதன்படியே, தனக்கு அறுவை சிகிச்சை செய்தபோது செல்போனில் கேண்டி கிரஷ் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையும் செய்து முடிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags: ,