சர்வதேச கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியது அரசாங்கம்…..!

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் குறுகிய காலத்திற்கு இடைநிறுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று முதல் நிலுவையில் உள்ள அனைத்து சர்வதேச கடன்களுக்கும் இந்த தீர்மானம் பொருந்தும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச கடன்களை மறுசீரமைப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளுடன் இணங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெறப்பட்ட பின்னர் அனைத்து கடன் சேவைகளும் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!