
ஜனாதிபதி செயலகம் முன்பாக இளைஞர்களினால் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டத்தில் நேற்றைய தினம் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு கேவலமானதும்,மக்களை துயரத்திற்குள்ளாக்கிய ஆட்சியை ஒருபோதும் கண்டதுமில்லை ,கேள்விப்பட்டதுமில்லை. அதேபோல் இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டத்தையும் நான் கண்டதில்லை.
அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக இளைஞர்கள் ஒன்றினைந்துள்ளார்கள், தங்களுக்கு தேவையானவற்றை இளைஞர்கள் கோரவில்லை. வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து இளைஞர்கள் எதிர்கால தலைமுறையினருக்காக நாட்டையே கோருகிறார்கள்.
‘புதிய உலகம் பற்றி நினைப்பது தண்டனைக்குரிய குற்றமாயின் நாட்டில் நீதிமன்றம் மற்றும் சட்டம் எதற்கு’ நாம் குறிப்பிட்ட விடயங்கள் இன்று இளம் தலைமுறையினர் விளங்கிக்கொண்டுள்ளார்கள், இளம் தலைமுறையினரின் போராட்டம் நிச்சயம் வெல்லும்.முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!