திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நட்சத்திர ஹொட்டல்!

பெரும்பாலும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது வழக்கம். நடிகை திரிஷா சகட்டுமேனிக்கு வெளியூர் பிரயாணம் மேற்கொண்டு ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தோழிகளுடன் கடலில் நீந்தியும், கடற்கரையில் சன்பாத் எடுத்தும் பொழுதை ஜாலியாக கழிக்க அவ்வப்போது கோவாவிற்கு செல்வது வழக்கம். ‘ஹே ஜூட்’ மலையாள படம் மூலம் முதல் முறையாக மல்லுவுட் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. அங்கு தனது ராசியான ஓட்டலில் அறை புக் செய்யச் சொல்லிவிட்டார்.

இம்முறை திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி தர ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. திரிஷாவின் புகைப்படம் மற்றும் அவர் நடித்த கொடி படத்தின் கிளாப் போர்ட் ஆகியவற்றுடன் பெரிய சாக்லெட் கேக் ஒன்றும் தயாராக வைத்திருந்தனர்.திரிஷா வந்ததும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த கவனிப்பெல்லாம் எதற்கு என புரியாதவராக உள்ளே சென்றார் திரிஷா. அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த தனது படம் மற்றும் கேக்கை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். பிறகு தான் நிர்வாகத்தினர்,’எங்களுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் நீங்கள். அதனால்தான் இந்த வரவேற்பு’ என்றனர்.சில வருடங்களுக்கு முன் இதே ஓட்டலில் திரிஷா தங்கியிருந்தபோது பாத்ரூமில் அவர் குளிக்கும் காட்சியை மர்ம நபர் ஒருவர் திருட்டுத்தனமாக படமாக்கி இணைய தளத்தில் வெளியிட்டார். அதிர்ச்சி அடைந்த திரிஷா, அது நான் அல்ல என்று தெரிவித்தார்.

Tags: ,