367 அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு மேலும் நீடிப்பு

367 அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சர் அலி சப்ரியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த இறக்குமதி கட்டுப்பாடு அமுலாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆப்பிள், பட்டர், ஆரஞ்சு, யோகட் உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்பான வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியன இந்த இறக்குமதி கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், கையடக்க தொலைபேசி, கெமரா, தொலைக்காட்சி, குளிரூட்டி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களும் இந்த இறக்குமதி கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சர் அலி சப்ரியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த இறக்குமதி கட்டுப்பாடு அமுலாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆப்பிள், பட்டர், ஆரஞ்சு, யோகட் உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்பான வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியன இந்த இறக்குமதி கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், கையடக்க தொலைபேசி, கெமரா, தொலைக்காட்சி, குளிரூட்டி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களும் இந்த இறக்குமதி கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!