பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: இமானுவல் மேக்ரானை என்னால் வெல்ல முடியும் – மரைன் லீ பென் சூளுரை!

பிரான்ஸ், ஜனாதிபதி தேர்தலால் பரபரப்படைந்துள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரானை தன்னால் வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்

அவரை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் (Marine Le Pen). பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்களிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மேக்ரானுக்கும் லீ பென்னுக்கும் வாக்குகளில் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது. முதல் சுற்று தேர்தலில், மேக்ரான் பெற்ற வாக்குகள் 27.8 சதவிகிதம், லீ பென் பெற்ற வாக்குகள் 23.1 சதவிகிதம்.
    
ஆகவே, தன்னால் மேக்ரானை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள லீ பென், மேக்ரானுக்கு வாக்களிக்காதவர்கள், வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் தனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, மேக்ரான் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தாமல் உக்ரைன் விவகாரத்தில் கவனம் செலுத்திய விடயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என பலர் தெரிவித்துள்ளார்கள். அவர்களை தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் லீ பென்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில், நாட்டின் பெரும் பிரச்சினையான விலைவாசி உயர்வு, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை என்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் லீ பென், மேலும், முன்னர் மேக்ரானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய மஞ்சள் சட்டை போராட்டங்கள் துவங்கிய பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
மேக்ரான் நாட்டைப் பிரித்துவிட்டதாகக் கூறும் லீ பென், நட்டை ஒன்றிணைக்கபோவது தான்தான் என கூறிவருகிறார்.

ஆக, மேக்ரானுக்கு இருக்கும் எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் லீ பென், தேர்தலில் தன்னால் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!