800 கோடி ரூபா மதிப்புள்ள வீடு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மைத்திரிபால

தான் வசிக்கும் வீட்டின் மதிப்பு 800 கோடி ரூபா இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தம்மை அவதூறாகப் பேசுவதற்கு எதிரணியினர் இவ்வாறான முட்டாள்தனங்களை உருவாக்கி வருவதாகவும், தனது இல்லம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 800 கோடி ரூபா பெறுமதியான வீடுகள் இல்லை எனவும், ஒரு வருடத்தின் பின்னர் அந்த வீட்டை காலி செய்யவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது பதவிக்காலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த பல குற்றவாளிகளை தாம் இலங்கைக்கு அழைத்து வந்து தூக்கிலிட்டதாகவும் அவர் கூறினார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!