கொள்கலன்களில் எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை …?

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில், பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவை தவிர வேறு நபர்களுக்கு கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பொற்றோலியக்  கூட்டுத்தாபனத்தின் தலைவர்  இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில்  நிலவும்  கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாகவே பாரிய எரிபொருள் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை மேலும் , 40, ஆயிரம்  மெற்றிக் தொன் டீசல் கெர்ளகலன் கப்பல்  ஒன்று  எதிர்வரும்  சில மணித்தியாலங்களில்  நாட்டை  வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


அத்துடன் 37, ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல்  கெர்ளகலன்   கப்பல் ஒன்று  எதிர்வரும்  5 நாட்களுக்குள்  வருகைதரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


 இதனடிப்படையில்  நாட்டிற்கு   இந்த மாதம்    2 லட்சத்து 65, ஆயிரம்  மெற்றிக் தொன்   டீசல்  இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!