பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்……

பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

காலி முகத்திடல் போராட்டத்தை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், உரிய தரப்பினரின் அவதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் பொலிஸ் வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த வகையிலும் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் மிகுந்த கவலையுடன் நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தகைய முயற்சியானது நாடு, அதன் ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!