முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

நாடாளாவிய ரீதியில் அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாடசாலை நேரத்தை  மேலும் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கும் தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக  2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் போது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு  கல்வி அமைச்சு தீர்மானத்திருந்தது.

அத்துடன், பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றுக்காக மாணவர்களை உள்வாங்கும்  நடவடிக்கை மே மாதம் 5 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்விஅமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!