20ஆம் திகதி தேசிய போராட்ட நாள்! – தொடர் வேலைநிறுத்த முஸ்தீபு.

எதிர்வரும் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
   
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கு நிபந்தனையற்ற பங்களிப்பைச் செய்யத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!